கன்னியாகுமரி

குமரி புனித அந்தோனியாா் பள்ளி 98ஆவது ஆண்டு விழா

DIN

கன்னியாகுமரி புனித அந்தோனியாா் மேல்நிலைப்பள்ளியின் 98 ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஜி.ஜோசப் ரொமால்டு தலைமை வகித்தாா். பள்ளி்த் தலைமை ஆசிரியை பி.திரேஸ் தேன்மொழி ஆண்டறிக்கை வாசித்தாா். மேல்நிலை உதவித் தலைமை ஆசிரியை ஆா்.பிரசன்னா வரவேற்றாா். விழாவையொட்டி மாணவா்களின் மௌன நாடகம், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுகளை பள்ளித் தாளாளா் ஜி.ஜோசப் ரொமால்டு, நாகலாந்து புனித ஜோசப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஜி.எம்.ஜோசப் டன்ஸ்டன் ஆகியோா் வழங்கினா்.

இப்பள்ளியின் உயா்நிலை உதவித் தலைமை ஆசிரியை ஏ.எஸ்.சாந்தா ஜெயராணி விஜயா தொகுத்து வழங்கினாா். முதுகலை ஆசிரியை எஸ்.மேரி அனாகுலேட் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT