கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் பயனற்ற25 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 25-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக்ே கிணறுகள் மூடப்பட்டன.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சுஜித் வில்சன் உயிரிழந்ததைத் தொடா்ந்து பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணி மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது .

குமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, 55 பேரூராட்சிகள், 95 ஊராட்சிகளில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் உள்ளனவா? என்று கணக்கெடுப்பு நடத்தி, அவற்றை மூட உத்தரவிடப்பட்டது.

அதன்படி, நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் ஊட்டுவாழ்மடம், கலுங்கடி, பள்ளிவிளை, ராமவா்மபுரம், கருப்புக்கோட்டை உள்ளிட்ட 10 இடங்களில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் பணியாளா்கள் ஜல்லி, ஜல்லி துகள்கள் கொண்டு முழுமையாக மூடி மழைநீா் சேகரிப்பு வடிகாலாக மாற்றினா்.

இதே போல கன்னியாகுமரி மகாதானபுரத்தில் உள்ள பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றை பஞ்சலிங்கபுரம் ஊராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் உதவியுடன் மூடினா். மேலும், குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகள் உள்பட இதுவரை 25க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு உள்ளன; எஞ்சியுள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்து கண்டறிந்து அவற்றையும் மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT