கன்னியாகுமரி

நாகர்கோவில் அரசு ஐ.டி.ஐ.யில் சேர செவி-பேச்சு திறனற்றோருக்கு வாய்ப்பு

DIN

நாகர்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர செவித்திறன், பேச்சுத்திறன் இல்லாதோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து,  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகர்கோவில் கோணத்திலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்  2019 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கான  (D‌e​a‌f a‌n‌d D‌u‌m​b) பொருத்துநர் (F‌i‌t‌t‌e‌r)) தொழில் பிரிவுக்கு காலியாக உள்ள இடத்திற்கு நேரடி சேர்க்கை செப். 5 முதல் நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பு செப். 16 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இப்பயிற்சியில்  சேர விரும்புவோர் தங்களது அசல் சான்றிதழ்களை நேரில் கொண்டுவந்து உடனடி சேர்க்கை பெறலாம். 
பிற மாவட்டத்தைச் சேர்ந்த பயிற்சியாளருக்கு இலவச விடுதி வசதி மற்றும் உணவு வசதி செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT