கன்னியாகுமரி

முள்ளங்கனாவிளை  பள்ளியில் ஓசோன் தினம்

DIN

கருங்கல் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் கருங்கல் அரிமா சங்கம், மாவட்ட தேசிய பசுமைப் படை ஆகியவை சார்பில் சர்வதேச ஓசோன் தினம்,  சர்க்கரைநோய் விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.
அரிமா சேம் தம்பிராஜ் தலைமை வகித்தார். அரிமா துரைராஜ் முன்னிலை வகித்தார்.
ஓசோன் தினம், மரங்களின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜோபிரகாஷ்,  சர்க்கரைநோய், அதைத் தடுக்கும் நடவடிக்கை குறித்து பத்பநாபபுரம் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் சுஜின் ஹெர்பர்ட், இயற்கைப் பாதுகாப்பு, மாடித் தோட்டம் குறித்து டாக்டர் எட்வின் கிளாட்சன், ராம் ஆகியோர் பேசினர்.
அரிமா சங்கம் சார்பில் அனைத்து மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், அரிமாக்கள் பிரிட்டோ தினகர், பெல்லார்மின் ஜோஸ், ஜார்ஜ் நெல்சன், ஜான்சுந்தர்ராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியை அருள்சகோதரி ஜெனட் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT