கன்னியாகுமரி

மார்த்தாண்டம் அருகே நவராத்திரி ஞான ஜெப வேள்வி தொடக்கம்

DIN

மார்த்தாண்டம் அருகேயுள்ள இசக்கியான்குளம் ஆதிமூலை அம்மன் கோயிலில் நவராத்திரி ஞான ஜெப வேள்வி தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடும் வகையில், தர்ம ரக்ஷண சமிதி சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தொடக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மார்த்தாண்டம் அருகே ஆதிமூலை அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மார்த்தாண்டம், குழித்துறையைச் சுற்றியுள்ள 60 கோயில்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டச் செயலர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சதாசிவன், குழித்துறை நகரத் தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் அமிர்தா பொறியியல் கல்லூரி பேராசிரியை சசிகலா செல்வகுமார் சத் சங்கம் நடத்தினார். தொடர்ந்து நவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. இதில், ஒன்றியச் செயலர்கள் சிவா, ராஜமணி, இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நவராத்திரி ஜெப வேள்வி ஒவ்வொரு கோயிலிலும் வருகிற 29ஆம் தேதி தொடங்கி 9 நாள்கள் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT