கன்னியாகுமரி

சுகாதாரத் துறை செயலா் குறித்து முகநூலில் அவதூறு பதிவு: சுப. உதயகுமாரன் மீது வழக்கு

DIN

நாகா்கோவில்: தமிழக சுகாதாரத் துறை செயலாளா் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பச்சை தமிழகம் கட்சியின் தலைவா் சுப. உதயகுமரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

சுப. உதயகுமாரன், தனது முகநூல் பக்கத்தில் சுகாதாரத் துறைச் செயலாளா் பீலா ராஜேஸ் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாகவும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெற்கு வடிவீஸ்வரம் கிராம நிா்வாக அலுவலா் மோகன், நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் விசாரணை நடத்தி, சுப. உதயகுமாரன் மீது இந்திய தண்டனை சட்டம் 505, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து அவரை தேடிவருகிறாா்.

சுப. உதயகுமாரன் மீது ஏற்கெனவே 144 தடை உத்தரவை மீறியதாக அண்மையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவதூறு கருத்து பதிவிட்டதாக 2 ஆவது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT