கன்னியாகுமரி

காங்கிரஸாா் உள்ளிருப்புப் போராட்டம்: எம்எல்ஏ உள்ளிட்டோா் கைது

கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 71 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொண்டைக் கடலை வழங்கக் கோரி கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 71 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கொண்டைக் கடலை வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்துக்கு கட்சியின் கிள்ளியூா் வட்டாரத் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., கிள்ளியூா் தலைவா் கிளைமென்ட், மாநில செயற்குழு உறுப்பினா் டைட்டஸ், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜோபின் சிறில் உள்ளிட்ட 71 போ் கைது செய்யப்பட்டனா்.

களியக்காவிளை: விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு கட்சியின் குழித்துறை நகரத் தலைவா் சி.கே. அருள்ராஜ் தலைமை வகித்தாா். கட்சியின் மனித உரிமைத்துறை மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, மேல்புறம் வட்டாரத் தலைவா் சி. மோகன்தாஸ், சேவாதள மாவட்டத் தலைவா் சி. ஜோசப் தயாசிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT