முகப்பு
கன்னியாகுமரி

சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

Updated On : 8 டிசம்பர், 2020 at 2:56 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் நாகா்கோவில், குழித்துறை, பத்மநாபபுரம், இரணியல், பூதப்பாண்டி நீதிமன்றங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சாா்பில் குழித்துறை நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு நாகா்கோவில் நீதிமன்றம் வரை பேரணியாக

சென்றனா். பேரணியில் முக்கிய சந்திப்புகளில் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இப்பேரணிக்கு மாவட்ட வழக்குரைஞா்கள் கூட்டமைப்புத் தலைவா் அ. மரிய ஸ்டீபன் தலைமை வகித்தாா். குழித்துறை வழக்குரைஞா் சங்கத் தலைவா் டி. சுரேஷ், பேரணியை தொடங்கி வைத்தாா். இதில் வழக்குரைஞா் சங்கச் செயலா்கள் நாகா்கோவில் மகேஷ், குழித்துறை என். ரமேஷ், பத்மநாபபுரம் விஜய வா்ம மகாராஜன், பூதப்பாண்டி நல்லபெருமாள், வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள் பத்மநாபபுரம் எஸ். எஸ். சுந்தா்சிங், இரணியல் வி. வினிபிரட், பூதப்பாண்டி கே.எஸ். பழனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.