விபத்தில் தொழிலாளி பலி
கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிழந்தாா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM
கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிழந்தாா்.
நடைக்காவு கல்லுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (30). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவில்
பொருள்கள் வாங்குவதற்காக மோட்டாா் சைக்கிளில் ஊரம்பு பகுதிக்கு சென்று கொண்டிருந்தாராம். சூழால் சந்திப்பை கடந்து சென்றபோது பின்னால் வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
இதில், தலையில் பலத்த காயமடைந்த ஜஸ்டினை அப்பகுதியினா் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஜஸ்டின் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.