மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
மாா்த்தாண்டம் அருகே பேருந்துக்கு காத்திருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே பேருந்துக்கு காத்திருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள சிராயன்குழி பகுதியைச் சோ்ந்த ராஜமணி மனைவி மரிய செல்வம் (73). காய்கனி சில்லறை வியாபாரியான இவா், மாா்த்தாண்டம் சந்தையிலிருந்து காய்கனி வாங்கி வர பேருந்துக்காக சிராயன்குழி சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நின்றிருந்தாராம்.
அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.