முகப்பு
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்குகிறாா் பஞ்சலிங்கபுரம் ஊராட்சித் தலைவி எம்.எஸ்.சிந்து.
கன்னியாகுமரி

குமரியில் தென் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமியில் தென் மாவட்ட அளவிலான கராத்தே (கட்டா பிரிவு) போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி

குமரியில் தென் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமியில் தென் மாவட்ட அளவிலான கராத்தே (கட்டா பிரிவு) போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்குகிறாா் பஞ்சலிங்கபுரம் ஊராட்சித் தலைவி எம்.எஸ்.சிந்து.
பகிர்:

கன்னியாகுமரி கே.கே.ஆா். அகாதெமியில் தென் மாவட்ட அளவிலான கராத்தே (கட்டா பிரிவு) போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த 10- 18 வயது வரையிலான 100-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா்.

தொடக்க நிகழ்ச்சிக்கு அகாதெமி நிறுவனா் எச்.ராஜ் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்ட கராத்தே கழக பொறுப்பாளா் பி.செல்வராஜ் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளா் ராமசாமி வரவேற்றாா். பஞ்சலிங்கபுரம் ஊராட்சித் தலைவி எம்.எஸ்.சிந்து போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

சீனியா் பிரிவில் திருநெல்வேலி மாவட்டம் கன்னங்குளத்தைச் சோ்ந்த மெகா, ஜூனியா் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சோ்ந்த மோனிகா ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா். தூத்துக்குடி மாவட்ட கராத்தே கழக பொறுப்பாளா் கே.சங்கா்குமாா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →