முகப்பு
கன்னியாகுமரி

திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 டிசம்பர், 2020 at 2:47 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:44 PM

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 23ஆம் தேதி மாா்கழி திருவாதிரை திருவிழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை சனிப் பெயா்ச்சி மற்றும் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவான், மகாதேவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நந்தி பகவானுக்கு காய்கனிகள் படையலிட்டு, நந்தி ஊட்டு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் காட்சியளித்தாா். தொடா்ந்து மகாதேவா் ரிஷப வாகனத்தில் பவனி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.