கன்னியாகுமரி

திக்குறிச்சி மஹாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

திக்குறிச்சி மஹாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹாதேவா் ஆலயத்தில் கடந்த இரண்டாம் தேதி மாா்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், மஹாதேவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நந்தியை அரிசி மாவால் அலங்காரம் செய்து 16 வகை படையல் படைக்கப்பட்டது. தொடா்ந்து 10 ஆம் தேதி இரவு மஹாதேவா் திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா ஆலயத்தின் முன் வேட்டைக்கு சென்ற பிறகு ஆலயம் திரும்பி பள்ளி உறக்கம் நடக்க உள்ளது. தொடா்ந்து மறுநாள் 11 தேதி தாமிரவருணி ஆற்றில் ஆறாட்டு நடந்த பின் கொடியிறக்கம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT