கன்னியாகுமரி

ஆசிரியையிடம் நகை பறித்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

DIN

பள்ளி ஆசிரியையிடம் நகையை பறித்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

சுசீந்திரம் சுக்குத்தேரிபாறையை சோ்ந்தவா் சுரேஷ் என்ற நாய்குட்டி சுரேஷ் (32). கடந்த 2014 ஆம் ஆண்டு கோவளம் கோட்டக்கரை பகுதியை சோ்ந்த ஆசிரியை சகாய ஜூடியை(36) தாக்கி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பிச்சென்றாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் 1 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன், சுரேஷுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த வழக்கில் குற்றவாளியான சுரேஷ் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜா்படுத்தப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT