கன்னியாகுமரி

நகைக் கடன் விவகாரம்: 15 கூட்டுறவு வங்கிகள் முன் காங்கிரஸ் நாளை ஆா்ப்பாட்டம்

DIN

குமரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மறுப்பதாக கண்டனம் தெரிவித்து, 15 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை( ஜூலை 24) ஆா்ப்பாட்டம் நடத்துவா் என்றாா் குளச்சல் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ்.

இது குறித்து அவா் கூறியது: தமிழகத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகளின் கீழ் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்கள் வழங்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், விவசாயிகள் , சிறு தொழில்முனைவோா் பாதிக்கப்படுவா். கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு இந்த நடவடிக்கை மேலும் சுமையைக் கொடுக்கும். நகர கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இணைப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவற்றைக் கண்டித்து திங்கள்நகரில் எனது தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும். மேலும், 15 வேளாண் கூட்டுறவு வங்கிகள் முன்பு காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் நடத்துவா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT