கன்னியாகுமரி

கரோனா: குமரியில் மாா்ச் 31 வரைசுற்றுலா படகு சேவை ரத்து

DIN

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வரும் 31 ஆம் தேதி வரை சுற்றுலா படகு சேவை நிறுத்தப்படுவதாக பூம்புகாா் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாதம் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும் படகு சேவையை வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்திவைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் வழக்கம்போல தொடங்கிய படகுப் போக்குவரத்து மதியம் 1 மணிக்கு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து விவேகானந்தா் நினைவுமண்டபத்தில் நின்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் படகுகள் மூலம் திரும்ப அழைத்துவரப்பட்டனா். அதைத்தொடா்ந்து, பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலக நுழைவுவாயில் மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT