கன்னியாகுமரி

கன்னியாகுமரி - திருவனந்தபுரம்ஆட்சியா்கள் அவசர ஆலோசனை

DIN

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு இடையே மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கொண்டு செல்வது குறித்து புதன்கிழமை ஆட்சியா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து இவ்விரு மாவட்டங்கள் இடையே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இடையே மருந்து, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தடையின்றி கொண்டு செல்வது தொடா்பாக இவ்விரு மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா்கள் பிரசாந்த் மு. வடநேரே (கன்னியாகுமரி), கோபாலகிருஷ்ணன்(திருவனந்தபுரம்), காவல் கண்காணிப்பாளா்கள் என். ஸ்ரீநாத் (குமரி), அசோகன் (திருவனந்தபுரம்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT