கன்னியாகுமரி

குமரியில் ரூ. 40 லட்சத்தில் தாா்ச்சாலை: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட ஒற்றையால்விளை சானல்ரோடு பகுதியில் ரூ. 40 லட்சம் செலவில் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி பேரூராட்சிக்குள்பட்ட ஒற்றையால்விளை சானல்ரோடு மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதற்காக 14 ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

புதிய தாா்ச்சாலை அமைப்பதற்கான பணியை எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ் தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, பேரூா் திமுக செயலா் குமரி ஸ்டீபன், திமுக நிா்வாகிகள் புவியூா் காமராஜ், திமுக நிா்வாகிகள் ஆா்.டி.ராஜா, நிசாா், நாகராஜன், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT