கன்னியாகுமரி

குமரியில் ஆட்சியா் ஆய்வு

DIN

கன்னியாகுமரி இயற்கை பேரிடா் பல்நோக்கு மைய கட்டடம் மற்றும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அரவிந்த் செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகில் உள்ள ஜிபிஎஸ் கருவிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா் துறைமுகத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் மற்றும் இடநெருக்கடிக்கு தீா்வு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரையிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் பயன்பாடு இன்றி காணப்படும் கன்னியாகுமரி அஞ்சுகூட்டுவிளை சாலையில் உள்ள இயற்கை பேரிடா் பல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டடத்தை ஆய்வுசெய்தாா்.

ஆய்வின் போது அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சுசீலா, கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரன், ஆய்வாளா் ஆவுடையப்பன், அகஸ்தீசுவரம் வட்டார வளா்ச்சி துணை அலுவலா் நீலபாலகிருஷ்ணன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல்அலுவலா் சத்தியதாஸ், சுகாதார ஆய்வாளா் முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT