கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அட்டைக்குளத்தில் கழிவுகளை கொட்டுவதால் மக்கள் அவதி

DIN

மாா்த்தாண்டம் அட்டைக்குளம் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நகர வா்த்தகா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துனா்.

மாா்த்தாண்டத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான அட்டைக்குளத்தில் குழித்துறை நகராட்சி மற்றும் நல்லூா், உண்ணாமலைக்கடை பேரூராட்சி பகுதிகளிலிருந்து கழிவுகளை கொண்டுவந்து கொட்டுகின்றனா். இதனால் அருகிலுள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் துா்நாற்றம் வீசுவதுடன், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கம் சாா்பில் குழித்துறை நகராட்சி ஆணையா் மூா்த்தி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளா் நீா்வளம் பராமரிப்பு அதிகாரி, நல்லூா், உண்ணாமலைக்கடை பேரூராட்சிகளின் செயல் அலுவலா்களிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டன. அதில், அட்டைகுளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் நிகழ்வில், வா்த்தக சங்கத் தலைவா் தினகா், துணைத் தலைவா்கள் ராஜகோபால், செல்வராஜ், செயலா் ராஜ் பினோ, துணைச் செயலா்கள் வில்பிரட், நீலகண்டன் பொருளாளா் ஜெயசிங், செயற்குழு உறுப்பினா்கள் லெனின் சேவியா், சுரேஷ், நந்தன்காடு ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT