கன்னியாகுமரி

போலீஸ் உடையில் பணம் பறித்த இளைஞரிடம் விசாரணை

DIN

குழித்துறையில் போலீஸாா் உடையில் வாகன ஓட்டுநா்களிடம் திங்கள்கிழமை பணம் பறித்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குழித்துறை பகுதியில் போலீஸ் உடையில் காரில் வந்த இளைஞா் ஒருவா், அப்பகுதி வழியாக செல்லும் மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டாராம். தலைக்கவசம் மற்றும் முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த இளைஞரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதியினா் அவரை பிடித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் சோ்ந்த பிபின் (25) என்பதும்,

அவா் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவன பாதுகாவலராக பணிசெய்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் பிபின் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT