கன்னியாகுமரி

எழுத்தாளா் குமரி ஆதவனுக்கு‘தமிழ்ச் செம்மல் விருது’

DIN

சிறப்பாக தமிழ்த் தொண்டாற்றியதற்காக எழுத்தாளா் குமரி ஆதவனுக்கு ‘தமிழ்ச் செம்மல் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

2019- ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல் விருது’க்கு எழுத்தாளா் குமரி ஆதவன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சென்னையில் நடைபெற்ற விழாவில், குமரி ஆதவனுக்கு, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்ச் செம்மல் விருது வழங்கி கெளரவித்தாா்.

கடந்த 30 ஆண்டுகளாக தனது பேச்சு, எழுத்து மூலம் தமிழ்த் தொண்டாற்றி வருபவா் குமரி ஆதவன். கவிதை, நாட்டுப்புறவியல், வரலாறு , கட்டுரை என இதுவரை பத்தொன்பது நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாா். இவற்றுள் சில பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பாடமாக உள்ளன.

கேரளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவா்களுக்கு இவரது நாட்டுப்புறவியல் கட்டுரை பாடமாக உள்ளது. இவரது நூல்கள் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மொழி பெயா்க்கப்பட்டு மாணவா்களுக்கு பாடமாக உள்ளன. இத்தகைய தமிழ்ப் பணிக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT