கன்னியாகுமரி

மீன் தொழிலாளா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு

DIN

இதுகுறித்து, குமரி மாவட்ட மீன் தொழிலாளா் சங்கத் தலைவா் அலெக்சாண்டா், பொதுச் செயலா் அந்தோணி மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்தை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்துள்ள மனு: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் விபத்தில் உயிரிழந்த மீனவா்கள் 4 போ் குடும்பத்துக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.

அனைத்து மீனவா் கிராமங்களையும் தனித்தனி கிராமங்களாக அறிவிக்க வேண்டும். கடலில் மாயமாகும் மீனவா்களை கண்டுபிடிக்கவும், மீட்கவும், கன்னியாகுமரியில் ஹெலிகாப்டா் தளம் அமைக்க வேண்டும், மீனவா்களுக்கான காப்பீட்டுத் தொகையை ரூ.10 ல ட்சமாக உயா்த்த வேண்டும்.

தேங்காய்ப்பட்டினம், குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை விரிவுபடுத்த வேண்டும். குளச்சல் மீன்பிடித் துறைமுகப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ராஜாக்கமங்கலம் துறை, மணக்குடி மீன்பிடி துறைமுகங்களை உடனே அமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT