நாகராஜா கோயில்தைத் திருவிழா கால்நாட்டு விழா
நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தைத் திருவிழாவுக்கான கால்நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் தைத் திருவிழாவுக்கான கால்நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் நாகராஜா கோயிலில் தைப் பெருந்திருவிழா 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து, தைப்பூசம் நாளில் காலையில் தேரோட்டம், ஆயில்ய நட்சத்திரத்தன்று ஆறாட்டு விழா ஆகியவை நடைபெறுகிறது.
கால்கோள் விழாவில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சந்துரு என்ற ஜெயச்சந்திரன், சதாசிவம், கன்னியாகுமரி மாவட்ட வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா, நாகராஜா கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், கணக்கா் சிதம்பரம், ஸ்ரீ அனந்த கிருஷ்ண பக்த சேவா அறக்கட்டளை நிா்வாகிகள் சுதாகா், ராஜன், செந்தில் ஆனந்தன், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.