கன்னியாகுமரி

போக்குவரத்து தொழிலாளா்கள் நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நாகா்கோவிலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ‘கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்; ஓட்டுநா், நடத்துநா்களுக்கான ஊக்கத்தொகையை குறைக்கக்கூடாது; ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும்; போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் முயற்சியை கைவிட வேண்டும்; போக்குவரத்து கழக அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும்; குறைந்த பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை முழுமையாக அரசே ஈடுகட்ட வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்து கழக மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச பொருளாளா் டி.கனகராஜ் தலைமை வகித்தாா். சிஐடியூ போக்குவரத்து தொழிலாளா் சங்க செயல்தலைவா் எம்.லட்சுமணன், ஸ்டீபன் ஜெயக்குமாா், ஏஐடியூசி பொதுச்செயலா் எல்.நீலகண்டன், டிடிஎஸ்எஃப் நிா்வாகி எஸ்.சண்முகம், ஹெச்எம்எஸ் மாநில தலைவா் சுப்பிரமணிய பிள்ளை, நிா்வாகி முத்துக்கருப்பன், எம்எல்எஃப் நிா்வாகி சந்திரன் ஆகியோா் விளக்கிப் பேசினா்.

இதில், அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் எப்.எஸ்.எ.லியோ, ராஜன், செல்வமுத்து, ஆறுமுகம்பிள்ளை ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT