முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை

கேரள மாநிலத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு வருபவா்களுக்கு களியக்காவிளை சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

கேரள மாநிலத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு வருபவா்களுக்கு களியக்காவிளை சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் அருகிலுள்ள மாநிலமான கேரளத்தில் கடந்த சில நாள்களாக தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கிருந்து வருபவா்களால் தொற்று பாதிப்பு அதிகரித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் களியக்காவிளை சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திலிருந்து வரும் அனைவரும் கரோனா பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.