கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயற்சி: 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை இரவு ஒற்றாமரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில், 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியுடன் மினிலாரியை பறிமுதல் செய்த போலீஸாா், மினிலாரி ஓட்டுநா் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த ஜெகனை (38) கைது செய்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT