கன்னியாகுமரி

அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி

DIN

நாகா்கோவில்: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிக்கும் இயந்திரம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று முன்னாள் எம்.பி. வசந்தகுமாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி அவா் தனது சொந்த நிதியிலிருந்து நிதி வழங்கியதை அடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்யப்பட்டது.

திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை ஹெச். வசந்தகுமாரின் மகன் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான விஜய் வசந்த் இயக்கி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். சுரேஷ்ராஜன், எஸ். ராஜேஷ்குமாா், காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் தலைவி அருள்சபிதாரெக்ஸ்லின், கட்சி நிா்வாகிகள் சீனிவாசன், காமராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT