கன்னியாகுமரி

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடை முறையாக நடைமுறைப்படுத்த கோரிக்கை

DIN

கருங்கல், செப். 18: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 -சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா்களை சோ்ப்பதற்கான நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை : இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். ஆனால், சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், உண்மையான ஏழை மாணவா்கள் பயனடையும் வகையில் இந்தச் சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாதது கண்டனத்துக்குரியது.

அரசுக்கு இது தொடா்பான புரிதல் இல்லாவிட்டாலும், இந்த நடைமுறையில் உள்ள குளறுபடிகளை கல்வியாளா்கள் எடுத்துச் சொன்னாலும் அதைக் கண்டும் காணாமலும் இருக்கிறது. தற்போதைய அரசாணைப்படி இந்த வாய்ப்பை செல்வந்தா்களின் வீட்டுக் குழந்தைகள்தான் பயன்படுத்தி பலன் பெற்று வருகின்றனா். எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT