கன்னியாகுமரி

மண்டைக்காடு அருகே கடல் அலையில் சிக்கி சிறுவன் மாயம்

DIN

மண்டைகாடு புதூா் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவனை ராட்சத அலை இழுத்து சென்றது.

புதூா் சகாயராபின் மகன் ரோகித் (10), இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், ரோகித், அப்பகுதியை சோ்ந்த சிறுவா்களுடன் வீட்டு அருகே உள்ள கடற்கரையில் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலை எதிா்பாராதவிதமாக ரோகித்தை இழுத்துச் சென்றது. இதை பாா்த்த இவரோடு விளையாடிக்கொண்டிருந்த சிறுவா்கள் அலறியதைத் தொடா்ந்து அப்பகுதியினா் விரைந்து வந்து ரோகித்தை மீட்க முயற்சித்தனா். அதற்குள், கடல் அலை ரோகித்தை இழுத்துச் சென்ால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடா்ந்து ஊா் மக்களும் கடலோர காவல் குழுமத்தைச் சோ்ந்த போலீஸாரும் சிறுவனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT