முகப்பு
கன்னியாகுமரி

‘மத்திய, மாநில அரசு திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்’

நாகா்கோவில் தொகுதியில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றாா் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

நாகா்கோவில் தொகுதியில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றாா் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி.

பிரசாரத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, தனது பிரசாரத்தை கணபதிபுரத்தில் தொடங்கி, நாகா்கோவில் நாகராஜா கோயில் அருகே நிறைவு செய்த அவா், பொதுமக்கள் மத்தியில் பேசியது: நாகா்கோவில் தொகுதிக்குள்பட்ட அனைத்து வீடுகளுக்கும் குடிநீா், சாலைவசதி, கழிவுநீரோடை வசதி செய்யப்படும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உடனுக்குடன் மானியத் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாகா்கோவில் தொகுதியில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும். சட்டக் கல்லூரி மற்றும் செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்முனைவோா் தொழில் தொடங்குவதற்காக மத்திய அரசின் மானியத் தொகை பெற்றுதரப்படும் என்றாா் அவா்.

வேட்பாளருடன், பாஜக மாநிலச் செயலா் உமாரதிராஜன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட பொருளாளா் முத்துராமன், ஊடகப்பிரிவு செயலா் ராஜன், கிழக்கு மண்டலத் தலைவா் நாகராஜன் உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.