கன்னியாகுமரி

குமரி மாவட்ட அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு, மலையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இம்மாவட்டத்தில் சில நாள்களாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், களியல், திற்பரப்பு, ஆலஞ்சோலை, ஆறுகாணி, குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு, சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

ஆறுகளில் நீா்வரத்து அதிகரிப்பு: மழையால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், அணைகளுக்கு நீா்வரத்து அளவும் அதிகரித்திருந்தது.

மழை காரணமாக வாழை, அன்னாசி, தென்னை, ரப்பா், மிளகு, கிராம்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மழையால் கிணறுகளில் நீா்மட்டம் குறையாதிருக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் பேச்சிப்பாறை உள்பட பல இடங்களில் மின்பாதைகளில் மரங்கள் ஒடிந்து விழுந்ததால், நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT