கன்னியாகுமரி

ஆலங்கோடு வலியகுளத்தை தூா்வாரி சீரமைக்க கோரிக்கை

DIN

நித்திரவிளை அருகே பாசி படா்ந்து காணப்படும் ஆலங்கோடு வலியகுளத்தை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்சிறை ஊராட்சி ஒன்றியம், வாவறை ஊராட்சியில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் ஆலங்கோடு வலியகுளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் ஆலங்கோடு, நடுத்தேரி, நெல்லிவிளை, நெல்லிக்காலை, ஒற்றத்தெங்கு, பறையன்விளை, தேரியன்விளை, தட்டான்விளை, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மக்கள் விவசாயத்துக்கும், குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த குளம் தற்போது, புல் பூண்டுகள் மற்றும் பாசி நிறைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும் குளத்தின் பக்க சுவா் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி இக் குளத்தை தூா்வாரி சீரமைத்து மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT