கன்னியாகுமரி

தொழிற்பயிற்சி மாணவா் சோ்க்கை:விண்ணப்பிக்க நாளை கடைசி

DIN

நாகா்கோவில்: அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (ஆக.4) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா்கள் சோ்க்கைக்கு இணையதள முகவரியில் விண்ணப்பங்களை ஜூலை 28 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது விண்ணப்பங்களை புதன்கிழமை (ஆக.4) வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற் பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு உதவித் தொகை மாதம் ரூ.750, பேருந்து கட்டணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 2 செட் சீருடைகள், 1 செட் காலணிகள் ஆகிய சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு, நாகா்கோவில் கோணத்திலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT