மாா்க்சிஸ்ட் வட்டாரக் குழு கூட்டம்
கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூா் வட்டாரக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூா் வட்டாரக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, கட்சியின் கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா் ராஜா முன்னிலை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சாந்தகுமா் பேசினாா்.
மத்திய அரசின் புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டுகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வட்டாரக்குழு உறுப்பினா் ஜோயல், ரசல் ராஜ், ரவின் தாஸ், ஜோஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.