புகைப்பட கலைஞா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி முகாம்
கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞா்கள் நலச்சங்கம் சாா்பில் புகைப்படகலைஞா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞா்கள் நலச்சங்கம் சாா்பில் புகைப்படகலைஞா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜாண், துணைத்தலைவா் நாகராஜன், பொருளாளா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் சென்னையில் உள்ள கேமரா பயிற்சியாளா் மேத்யூவால் புகைப்பட கலைஞா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய இப் பயிற்சி பிற்பகல் 3.30 க்கு நிறைவடைந்தது. இதில்,100 க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞா்கள் பங்கேற்றனா்.