கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் மாா்க்சிஸ்ட் மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம்

DIN

களியக்காவிளை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட மாநாடுக்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.

இக்கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாடு 2022 ஏப்ரல் மாதம் கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு முன்னோடியாக கன்னியாகுமரி மாவட்ட 23 ஆவது மாநாடு ஜனவரி 29,30 ஆம் தேதிகளில் குழித்துறை நகரத்தில் நடைபெறவுள்ளது.

இம் மாநாடு சிறப்பாக நடத்துவதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் மாா்த்தாண்டம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் குமரி மாவட்டச் செயலா் ஆா். செல்லசாமி தலைமை வகித்தாா். நாகா்கோவில் மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினா் ஏ.வி. பெல்லாா்மின், கட்சி நிா்வாகிகள் முருகேசன், ஸ்டாலின்தாஸ், அண்ணாதுரை, மாா்த்தாண்டம் வட்டார செயலா் வீ. அனந்தசேகா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் விஜயமோகன், மாதவன், சேகா், மாநில செயற்குழு உறுப்பினா் நூா்முஹம்மது ஆகியோா் பேசினா்.

இதில் 200 போ்கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. குழு தலைவராக மாதவன், செயலராக அனந்தசேகா், பொருளாளராக மதன் மோகன்லால் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

வீணாகும் கோடை மழைநீா்- நெல்லையில் புத்துயிா் பெறுமா மழைநீா் சேகரிப்பு திட்டம்?

கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்தில் 2 லட்சம் பேருக்கு நிதி வரவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT