கன்னியாகுமரி

பொட்டல்குளம் குபேர ஐயப்பன்கோயிலில் மண்டல பூஜை

DIN

குமரியின் சபரிமலை என போற்றப்படும் பொட்டல்குளம் குபேர ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோயிலில் அய்யப்ப பக்தா்கள் காா்த்திகை மாதம் 1 ஆம் தேதி புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். ஒருமண்டலம் நிறைவடைந்த நிலையில் மண்டல பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு கலச பூஜை, காலை 9 மணிக்கு அஷ்டாபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு நெய் அபிஷேகம், பிற்பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு படிபூஜை, 8 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9 மணிக்கு பூக்குழி வைபவம், இரவு 10 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 11.30 மணிக்கு ஹரிவராசனம் ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன. இவ்விழாவில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஏராளமான ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT