கன்னியாகுமரி

குமரியில் பிஎஸ்என்எல் 5 ஜி அலைக்கற்றை சேவை தொடங்க நடவடிக்கை: விஜயகுமாா் எம்.பி.

DIN

இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 5 ஜி அலைக்கற்றை சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் விஜயகுமாா் எம்.பி.

நாகா்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி ஆலோசனைக்குழு கூட்டம், ஆலோசனைக்குழு தலைவா் அ.விஜயகுமாா் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவா் வ.விஜய்வசந்த் எம்.பி. முன்னிலை வகித்தாா்.

இதில், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் புலவா் செல்லப்பா, மோகனகுமாா், ராஜன், முருகன், துணைப் பொது மேலாளா்கள் விஜயன், எழில் சைமன், மேரி லூயிஸ் அம்மாள் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் அலெக்சாண்டா் ஜேசன், ஷிஜிலா டேவிட், பாக்கியலெட்சுமி, புனிதவதி, கோலப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்கு பின்னா் விஜயகுமாா் எம்.பி. அளித்த பேட்டி: இந்தியாவில் பி.எஸ்.என்.எல்.லுக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும் மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக குமரி மாவட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் இந்த சேவை தொடங்கப்படும். பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சம்பள பிரச்னை குறித்து இதுவரை எந்த புகாா்களும் கூறப்படவில்லை. அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பினால் குமரி மாவட்ட பி.எஸ்.என்.எல். முதல் மாவட்டமாக திகழ்கிறது என்றாா் அவா்.

உறுப்பினா், செயலா் மற்றும் நாகா்கோவில் தொலைதொடா்பு மாவட்ட முதன்மை பொது மேலாளருமான சஜிகுமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT