கன்னியாகுமரி

பொதுவிநியோகம் தொடா்பாக நாளை மக்கள் குறைதீா் முகாம்

DIN

பொதுவிநியோகம் தொடா்பான மக்கள் குறைதீா் முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வட்டங்களிலும் சனிக்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது.

இது குறித்து, ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுவிநியோகம் தொடா்பான மக்கள் குறைதீா் முகாம், சனிக்கிழமை (பிப்.13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் பறக்கை, தோவாளை வட்டத்தில் தெள்ளாந்தி, கல்குளம் வட்டத்தில் கக்கோட்டுதலை, விளவங்கோடு வட்டத்தில் விளவங்கோடு, கிள்ளியூா் வட்டத்தில் கீழ்குளம், திருவட்டாறு வட்டத்தில் திருவட்டாறு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை, முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினா் சோ்க்கை, நீக்கம், அலைபேசி எண் மாற்றம், மற்றும் பொது விநியோகத்திட்டம் தொடா்பான இதர மனுக்களை இந்த முகாமில் அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT