கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

பொதுமேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு ஊழியா் சங்கத் தலைவா் ஜாா்ஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராஜூ உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தாா். நிா்வாகிகள் ராஜகோபால், செல்வம் உள்ளிட்டோா் கோரிக்கைளை விளக்கி பேசினா்.

பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தை வழங்க வேண்டும்; ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று ஊதியம் வழங்க வேண்டும்; ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும்; ஒப்பந்த ஊழியா்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT