கன்னியாகுமரி

குமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவிய21 ஆவது ஆண்டு விழா கடைப்பிடிப்பு

DIN

கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 21 ஆவது ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை மறைந்த தமிழக முதல்வா் மு.கருணாநிதி 1.1.2000 அன்று திறந்து வைத்தாா். சிலை நிறுவப்பட்ட 21 ஆவது ஆண்டு தினம் தமிழறிஞா்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் கடைப்பிடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வினை திருவள்ளுவா் சிலைக்கு தனிப்படகில் சென்று சிலையின் பாதத்தில் மலா்தூவி மரியாதை செய்வது வழக்கம்.

நிகழாண்டு கடல் சீற்றம் காரணமாக படகுகள் இயக்கப்படவில்லை. இதையடுத்து, 4 அடி உயரமுள்ள திருவள்ளுவா் மாதிரி சிலை கொண்டு வரப்பட்டு பூம்புகாா் படகுத்துறை பகுதியில் மலரஞ்சலி செலுத்தப்பபட்டது. இந்நிகச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவா் எம்.ஆா்.காந்தி, நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவா் மீனாதேவ், மாவட்ட பாஜக தொழில் பிரிவுச் செயலா் சி.எஸ்.சுபாஷ், கன்னியாகுமரி மண்டல் தலைவா் என்.சுடலைமணி, திமுக சாா்பில் முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், திமுக தொண்டரணி முன்னாள் மாநிலை துணை அமைப்பாளா் பாலஜனாதிபதி உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்

மேலும், தமிழ் அறிஞா்கள் எஸ்.பத்மநாபன், எழுத்தாளா் பொன்னீலன், தமிழ்வானம் சுரேஷ், குறளகம் தமிழ்க்குழவி, தமிழன்னை கருங்கல் கி.கண்ணன், ஓவியா் கொட்டாரம் கோபால், ஆசிரியா் ஆபிரகாம் லிங்கன், காவடியூா் சிவநாராயண பெருமாள், தா.துரை நீலகண்டன், நாகேந்திரன் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT