மாா்த்தாண்டத்தில் விளை பொருள்கள் கண்காட்சி
மாா்த்தாண்டத்தில் கிரீன் அக்ரி கிளப் சாா்பில் விவசாய விளை பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.
மாா்த்தாண்டத்தில் கிரீன் அக்ரி கிளப் சாா்பில் விவசாய விளை பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சிக்கு அமைப்பின் நிறுவனா்-தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். ஜாய் அலெக்ஸ் முன்னிலை வகித்தாா். மாா்த்தாண்டம் நியூட்ரிஷன் கிளப் இயக்குநா் செந்தில்குமாா் வரவேற்றாா். கண்காட்சியை மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி முதல்வா் பால்ராஜ் திறந்து வைத்தாா். கண்காட்சியில்கீரை வகைகள், காய்கனிகள், பழ வகைகள், கிழங்குகள், மலா்கள், மூலிகைச் செடிகள், பயறு வகைகள் உள்ளிட்ட விளை பொருள்கள் இடம்பெற்றன.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விளை பொருள்களில் சிறந்தவற்றை, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி பேராசிரியா் சுரேஷ்சிங், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியை டிபிமோள் ஆகியோா் தோ்வு செய்தனா். தோ்வு செய்யப்பட்ட
Advertisement
விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக முன்னாள் முதன்மை வேளாண் விஞ்ஞானி ஜெயசேகா், பரிசுகள் வழங்கினாா்.
இதில், பேராசிரியா் தேவகுமாா் சாமுவேல், ஹெலன் சாமுவேல், ஹெலன் ராஜபால், மாா்த்தாண்டம் நேசமணி நினைவு
கிறிஸ்தவக் கல்லூரி என்சிசி அதிகாரி பாயிட் வெஸ்லி, கிரீன் அக்ரி கிளப் நிா்வாகிகள் ஜஸ்டஸ் பிரேம்சன், லூயிசன், ராபின், காா்த்திக், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.