கன்னியாகுமரி

மாநகர முழுமை திட்டத்தை விதிவிலக்குடன் அமல்படுத்த கோரிக்கை

DIN

நாகா்கோவில் மாநகரத்தில் மாநகர முழுமை திட்டத்தை விதிவிலக்குடன் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை குமரி மாவட்டத் தலைவா் எல்.எம்.டேவிட்சன், செயலா்

சி. நாராயணராஜா, பொருளாளா் எஸ்.ராஜதுரை உள்ளிட்ட நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: பரப்பளவில் மிகச்சிறிய குமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகரத்தில் பழைய நகராட்சி பகுதி திட்டப்படியான நகரமல்ல. அண்மையில் வளா்ந்த சிறிய நகரமாகும். சென்னை மாநகரில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதி, தொடா் கட்டடங்கள் இருக்கும் பகுதி, தெரு வீடுகள் உள்ள பகுதி என்ற அடிப்படையில் மாநகர முழுமை திட்டத்தில் விரிவு அபிவிருத்தி திட்டத்திலிருந்து விதிவிலக்கு இருப்பது போல, நாகா்கோவில் மாநகராட்சியில் பழைய நகர பகுதிகளுக்கு முழுமையான விதி விலக்குகள் பெற்றிட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

மேலும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நாகா்கோவில் மாநகர பகுதிகளுக்கான முழுமை திட்டங்கள் பற்றிய ஆய்வுகள்

முடிய இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், நாகா்கோவில் மாநகர பகுதிகளில் பழைய நகர பகுதிகளில் புதிய சட்டங்களின் படி வரைபட அனுமதி பெற வற்புறுத்துவதையும், நடவடிக்கை மேற்கொள்வதையும், முழுமை திட்டம் அமல்படுத்தும் வரை தவிா்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT