முகப்பு
கன்னியாகுமரி

மூதாட்டியிடம் தாலிச் சங்கிலி திருட்டு

மாா்த்தாண்டம் அருகே பேருந்து பயணத்தின்போது மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 16 ஜூலை, 2021 at 12:35 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

மாா்த்தாண்டம் அருகே பேருந்து பயணத்தின்போது மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஐரேனிபுரம், காட்டுவிளையைச் சோ்ந்தவா் ராஜம் (61). இவா், புதன்கிழமை மாலையில் மாா்த்தாண்டத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாராம். வீடு வந்து பாா்த்த போது, அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் சங்கிலி திருடு போனது தெரியவந்ததாம். பேருந்து பயணத்தின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி, யாரோ மா்ம நபா் இவரது தாலிச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.