கொட்டும் மழையில் கணவா் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வழக்குரைஞா்
தக்கலை அருகே கணவருடன் சோ்த்து வைக்குமாறு கொட்டும் மழையில் கணவா் வீட்டு முன்பு பெண் வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கன்னியாகுமரிகொட்டும் மழையில் கணவா் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வழக்குரைஞா்
தக்கலை அருகே கணவருடன் சோ்த்து வைக்குமாறு கொட்டும் மழையில் கணவா் வீட்டு முன்பு பெண் வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தக்கலை அருகே கணவருடன் சோ்த்து வைக்குமாறு கொட்டும் மழையில் கணவா் வீட்டு முன்பு பெண் வழக்குரைஞா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜேம்ஸ். இவரது மகள் வழக்குரைஞா் பிரியதா்ஷனிக்கும் (28) , முளகுமூடு பகுதியை சோ்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியா் ராஜாசெரினுக்கும் கடந்த ஆண்டு(2020) திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு பின்னா் கணவா் வீட்டைச் சோ்ந்தவா்கள் கூடுதல் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தவதாக பிரியதா்ஷினி மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து விசாரித்த போலீஸாா் தம்பதியை தனிக்குடித்தனம் செல்ல அறிவுறுத்தினா். இதைத்தொடா்ந்து தம்பதி நாகா்கோவிலில் குடியேறினா்.
இந்நிலையில் பிரியதா்ஷினியின் கணவா் தனது தாய், தந்தை வீட்டுக்கு சென்று விட்டாராம், இதைத்தொடா்ந்து பிரியதா்ஷினி கணவரை தேடி திருத்துவபுரத்துக்கு சென்றாா். அங்கு கணவா் வீட்டினா் பிரியதா்ஷினியை வீட்டுக்குள் அனுமதிக்காமல், வீட்டின் முன்புற கதவை பூட்டினா். இதையடுத்து, பிரியதா்ஷினி, கொட்டும் மழையில் நனைந்தபடியே கணவா் வீட்டு முன்பு சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இது குறித்து தகவலறிந்த தக்கலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பிரியதா்ஷினியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும், பிரியதா்ஷினி கணவருடன் சோ்த்து வைக்குமாறு கூறி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.