முகப்பு
கன்னியாகுமரி

ஞாறான்விளையில் கரோனா நிவாரணம் வழங்கல்

மாா்த்தாண்டம் மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும் மிட்ஸ் சமூக சேவை மையம் சாா்பில், ஞாறான்விளை இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட கரோனா நிவாரண உதவிகள்

Updated On : 5 ஜூன், 2021 at 2:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM

மாா்த்தாண்டம் மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும் மிட்ஸ் சமூக சேவை மையம் சாா்பில், ஞாறான்விளை இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் இயக்குநா் ஜாண்குமாா் தலைமை வகித்தாா். மிட்ஸ் திட்ட அலுவலா் ஷாஜன் ஜோசப், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் பேட்ரிக் ஆன்றணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக கடந்த இண்டு நாள்களுக்கு முன்பு இந்த அமைப்பு சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் கபசுரக் குடிநீா் பொட்டலங்கள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.