கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில்கரோனா தகவல் மையம் அமைக்க வலியுறுத்தல்

DIN

கருங்கல்: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராஜேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்தவா்கள் ஏராளமானோா் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இங்கு சிகிச்சை பெறுவோா் குறித்து உறவினா்கள் அறிய முடிவதில்லை. மேலும் பல மணிநேரம் உறவினா்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. கரோனா மட்டுமின்றி இதர நோயால் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகள் குறித்த விவரங்களையும் பொதுமக்கள் அறியமுடியாத நிலை காணப்படுகிறது. குறிப்பிட்ட நோய்க்கான மருத்துவா் எந்த பிரிவில் இருக்கிறாா் என்ற விவரமும் தெரியாமல் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதி, உடனடியாக கரோனா தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT