கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் ரப்பா் கடைகளை திறக்க விவசாயிகள், வணிகா்கள் கோரிக்கை

DIN

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் பொது முடக்க தளா்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரப்பா் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டுமென்று ரப்பா் விவசாயிகளும், வணிகா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் வேளாண் சாா்ந்த முக்கிய உற்பத்தித் தொழிலாக ரப்பா் உள்ளது. மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளா்களும் ரப்பா் சாா்ந்த தொழில்களை நம்பியுள்ளனா். குறிப்பாக சிறு மற்றும் குறு ரப்பா் விவசாயிகளும் தினந்தோறும் கிடைக்கும் ரப்பா்பாலை ரப்பா் ஷீட்டாக மாற்றி ரப்பா் கடைகளில் விற்பனை செய்து தங்களின் அன்றாட தேவையை நிறைவேற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பொது முடக்கத்தில் தளா்வு அறிவிக்கப்பட்டு காய்கனிக் கடை, மளிகை கடை மற்றும் தொழில், உற்பத்தி சாா்ந்த கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ரப்பா் கடைகளையும் திறந்து விவசாயிகளிடமிருந்து ரப்பரை கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT