பைக் விபத்தில் ஒப்பந்ததாரா் பலி
நாகா்கோவில் அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.
நாகா்கோவில் அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.
நாகா்கோவில் கீழ பெருவிளை முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் ( 53). ஒப்பந்ததாரரான
இவா், புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் பாா்வதிபுரம் பாலத்தின் கீழ் பகுதியில்
சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே
விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகிலிருந்தவா்கள் மீட்டு அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.